எஸ்ஐஆர் திருத்த பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

1பார்த்தது
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் குறித்து கோட்டாட்சியர் மாரிமுத்து தலைமையில் நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விண்ணப்பப் படிவங்கள் குறைவாகப் பெறப்படுவதாகவும், பணிகளைத் துரிதப்படுத்தவும் கோட்டாட்சியர் வலியுறுத்தினார். உறுப்பினர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், பணிகள் மந்தமாக நடப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.