அருப்புக்கோட்டையில், மல்லாங்கிணறிலிருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் கருங்கற்களால் கட்டப்பட்ட கிணற்றின் மேல் விளிம்பில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின்படி, கலியுகம் 5002, பிலவ ஆண்டு மாசி மாதம், ஆங்கில வருடம் 1902-ல் மல்லாங்கிணர் க. நாகம நாயக்கரின் குமாரர் கணக்கு குப்புசாமி நாயக்கர், ஊர் மக்களின் பயன்பாட்டிற்காக இந்தக் கிணற்றை தர்மமாக அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.