விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்கள் பொங்கல் வைத்து இந்த விழாவை சிறப்பித்தனர். நீதிபதிகள் முத்துமகாராஜன், வரதராஜ், இலக்கியா, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மணிவண்ணன், செயலாளர் லதா மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.