அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கஞ்சநாயக்கன்பட்டி பகுதி விவசாயிகள் சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குப்பை கழிவுகளை எரிப்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும், வனத்துறை அதிகாரிகள் காட்டு பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்காததாலும், திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளை புறக்கணிப்பதாகவும், இதனால் விவசாயம் அழிந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். காளையார் கரிசல்குளம், ஆலடிப்பட்டி, பாலவநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வனச்சரக அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.