வழுக்கி விழுந்து மயக்கம் அடைந்தவர் பலி

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியைச் சேர்ந்த 25 வயது முனியசாமி, கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். கடையை கழுவிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து காயமடைந்து மயங்கியுள்ளார். அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி