விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், புதிதாகக் கட்டப்பட்ட 8 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.