விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என் நேரு அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமாக நகராட்சிகளுக்கு மட்டும் ரூ. 943 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளுக்கு ரூ. 191 கோடியை நம்முடைய முதலமைச்சர் இந்த 5 ஆண்டுகளில் வழங்கி இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளால் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ. 396 கோடியில் நிறைவேற்றப்பட்டு 3 லட்சம் மக்களுக்கு கூடுதலாக 43 எம். எல். டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்திற்கு சுமார் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் தேர்தல்
தமிழ்நாட்டில் இந்த கட்சிக்கும் அந்த கட்சிக்கும் என்ற போட்டி இல்லை, தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கு நடைபெறுகிற போட்டி. தமிழ்நாடு வெற்றி பெற்றால் தான் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே தான் அப்படிப்பட்ட வெற்றிக்காக அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.