அருப்புக்கோட்டை: சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

632பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் வடம்போக்கி தெருவில் ரூ.2 கோடியே 14 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை நகராட்சிக்கான சாலை பணிகளுக்கு முதலமைச்சர் ரூ.21 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நகராட்சி முன்னாள் சேர்மன் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி