சோமவார 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தின் 3வது சோமவாரத் திங்களன்று 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, கலச குடத்தில் புனித நீர் நிரப்பி, யாக சாலையில் வைத்து, 108 சங்குகளில் பால் நிரப்பி, வேத மந்திரங்கள் முழங்க கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் பூராணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் காசி விஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், வில்வ இலைகள் வைத்து அர்ச்சனைகள் மற்றும் ஏழு முக தீபாரதனைகளுடன் மகா தீபாரதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ விசாலாட்சி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அபிஷேகப் பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி