புதிய தமிழகம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கள அளவில் பணியாற்ற வேண்டிய முறைகள் மற்றும் செயலாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.