ராஜபாளையம்: லாரி கவிழ்ந்து உடைந்து விழுந்த மின் கம்பம்

596பார்த்தது
ராஜபாளையம்: லாரி கவிழ்ந்து உடைந்து விழுந்த மின் கம்பம்
ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேட் செல்வராஜ் (53) என்பவர், அரிசி ஆலைகளிலிருந்து சாம்பல் மூட்டைகளை லாரியில் ஏற்றிச் சென்றபோது, அம்மையப்பபுரம் இளந்திரைகொண்டான் சாலையின் வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதனால் மின் கம்பம் சேதமடைந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. தீயணைப்புத் துறையினர் லாரியை மீட்டனர். தளவாய்புரம் காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி