மாற்று திறனாளிகள் மறுவாழ்வு சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது

7பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் விழுதுகள் திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகள் மறுவாழ்வு சேவை மையம் இன்று துவங்கப்பட்டுள்ளது. வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ இந்த மையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலிங் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி