விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சி 30 அடி வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலையில் நடுவே உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சேதமடைந்த மின்மாற்றி மற்றும் சிமெண்ட் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை சாலையோரமாக மாற்றியமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.