ஏற்றுமதிக்கான தொழில்நுட்பங்கள்குறித்த கருத்தரங்குநடைபெற்றது

423பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-2026-ன் கீழ், தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகளுக்கான இரண்டு நாள் மாவட்ட அளவிலான கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தொடங்கி வைத்தார். அங்கக உரங்கள் தயாரிப்பு குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்மை இணை இயக்குநர், தோட்டக்கலை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், துறை அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நுகர்வோர்கள், ஏற்றுமதி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி