2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தையில், பக்ரீத் பண்டிகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற திருவிழாக்களை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்ததால், சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பண்டிகை காலங்களில் இங்கு ஆடுகள் விற்பனை அமோகமாக இருப்பது வழக்கம்.