அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு வெள்ளி முலாம் பூசப்பட்ட வெள்ளி ரதம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வெள்ளி ரதம் நாளை நவ. 9 காலை 11 மணியளவில் திருக்கோவிலில் ஒப்படைக்கப்பட்டு மாலை 6 மணி அளவில் கோவில் திருச்சுற்று பிரகாரத்தில் வெள்ளித் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.