தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

3பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் எஸ். காந்திராஜன் தலைமையிலான குழு, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டது. அருப்புக்கோட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 56 கடைகள் கொண்ட தினசரி மார்க்கெட் பணி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முழுமையடையாதது குறித்து குழுவினர் கேள்வி எழுப்பி, தரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும், முதல்வர் மருந்தகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தியாவிலேயே முதன்முறையாக பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் கைவிடப்பட்ட கல் குவாரியை சுற்றுச்சூழல் பசுமை பூங்காவாக மாற்றியதையும், அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தையும் குழுவினர் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி