வெள்ளி தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

982பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில், மாரியப்பன்-சத்தியவதி தம்பதியினர் நன்கொடையாக வழங்கிய சுமார் 1500 கிலோ எடை கொண்ட வெள்ளித் தேர் இன்று மாலை வெள்ளோட்டம் விடப்பட்டது. தேக்கு மரத்தில் செய்யப்பட்டு, செப்பு தகடு பதித்து, வெள்ளி முலாம் பூசப்பட்ட இந்த தேர், கோவில் வளாகத்தில் சிவ வாத்தியங்கள் முழங்க, புனித நீர் நிரப்பப்பட்ட கலசத்துடன் வலம் வந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி