திருத்தங்கல் கடைவீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை சோதனையிட்டனர். விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் பொன்னுமணி (20) மற்றும் பொன்இருளப்பன் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.