விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, நெசவாளர் காலனி அருகே இருசக்கர வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த 3 இளைஞர்களைக் கண்டனர். அவர்களை விசாரித்தபோது, போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதையடுத்து, போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் இருந்ததும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.