மெட்ரிக்குலேசன் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி.

434பார்த்தது
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய துணை இராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள செயிண்ட் ஜோசப் கார்மெல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ராணுவம், நேவி, விமானப்படை ஜவான்ஸ் நலச்சங்கத்தினர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள். மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி