விருதுநகர்: கட்டிட திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சருக்கு வரவேற்பு

841பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 25 லட்சம் மதிப்பில் புதிய அறிவியல் வகுப்பு மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். அவரை பள்ளியின் மாணவிகள் எம்.ஜி.ஆர். பாடலான 'நீங்க நல்லா இருக்கணும்' பாடலுக்கு அழகாக நடனமாடி, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி