டீசல் திருடிய இளைஞர் கைது

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் லாரி டிரைவர் ஆறுமுகம் தூங்கிக்கொண்டிருந்தபோது, மூன்று மகாராஷ்டிரா மாநில இளைஞர்கள் லாரியில் இருந்து டீசல் திருட முயன்றனர். ஆறுமுகம் சத்தம் போடவே, பொதுமக்கள் ஒருவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட இளைஞர் மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத்தைச் சேர்ந்த தத்தாத்ரே பாபுராவ் கோல்வே என தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 200 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி