
இராஜ: தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரின் முக்கிய சாலைகள், போக்குவரத்து மிகுந்த பகுதிகள் மற்றும் பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

























