சாத்தூரில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

75பார்த்தது
அமைதி பூங்காவனான தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றிய ஸ்டாலின் திமுக அரசுக்கு முடிவு கட்டவும், மன்னராட்சியை முடிவுகட்ட, மக்களாட்சியை மலர செய்யும் வகையில் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புனித அரசு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைத்திட, கழக அம்மா பேரவை சார்பில் வீடு வீடாக சென்று வாக்காளர் பெருமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு விருதுநகர் கிழக்கு மாவட்டம், அம்மா பேரவையின் சார்பில் சாத்தூர் நகரத்தில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. 

இந்த திண்ணை பிரச்சாரத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R. K. ரவிச்சந்திரன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் நகர கழக செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கையில் கழக கொடியினை ஏந்தி வீதி வீதியாக மக்களை சந்தித்து சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you