சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில், வசிப்பிடச் சான்றிதழ் வழங்கக் கோரி ஏற்பட்ட தகராறில், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் கிராம உதவியாளர் (தலையாரி) மீது திமுக தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயிலுமுத்து ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தலையாரி சங்கம் சார்பில் சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.