தப்ப முயன்ற குற்றவாளி முனியசாமிக்கு கை, கால் எழும்பு முறிவு..

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயிலில் நவ. 10 நள்ளிரவில் நடந்த கொள்ளையில் காவலர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். உண்டியல் பணம், பொருட்கள் திருடப்பட்டது. நவ. 12 அன்று கைது செய்யப்பட்ட நாகராஜ், தப்ப முயன்றபோது இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணனால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த முனியசாமி ராஜபாளையம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டன. தப்ப முயன்ற முனியசாமி ஆற்றில் குதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி