விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் மாநில சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நிலையான காலமுறை ஊதியம் வழங்க மறுத்து, அடிப்படை பணி தொகுதி பணியாளர்களாக அறிவிக்க மறுக்கும் நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை துறையை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.