திருச்சுழி: டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து பணம் திருட்டு

796பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தொட்டியாங்குளத்தில் அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளர் சின்னராஜ் மற்றும் விற்பனையாளர் சரவணன் ஆகியோரை அரிவாள் காட்டி மிரட்டி, ரூ. 1,09,500 ரொக்கப் பணத்தை மூன்று மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது, இருவரின் செல்போன்களையும் உடைத்துச் சென்றனர். இது குறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி