விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் மற்றும் விவசாயிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சுமார் ஒரு மணி நேரம் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.