இராஜ: விளைநிலங்களில் சேதப்படுத்தும் யானைகள்...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சேத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் தென்னை, மா, வாழை, நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. 80-க்கும் மேற்பட்ட தென்னை கன்றுகள் மற்றும் மரங்கள் சேதமடைந்துள்ளன. யானைகள் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் உணவு மற்றும் நீருக்காக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி