ராஜபாளையம்: வேன் மோதி விவசாயி பலி

1479பார்த்தது
ராஜபாளையம்: வேன் மோதி விவசாயி பலி
ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 58 வயது விவசாயி முருகன், முரம்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் மில் வேன் மோதி படுகாயம் அடைந்தார். அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் கோவிந்தராஜ் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி