இராஜ: அரசு மருத்துவமனை திறப்பு. அமைச்சர் KKSSR பங்கேற்பு...

0பார்த்தது
இராஜ: அரசு மருத்துவமனை திறப்பு. அமைச்சர் KKSSR பங்கேற்பு...
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ. 40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை புதிய கூடுதல் கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி