இராஜபாளையம் அருகே தென்றல்நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு விற்றதாக புகார் எழுந்த நிலையில், போலீசார் அவரிடமிருந்து 103 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, திவாகர் என்பவர் 26 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்த மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.