இராஜபாளையம் அருகே தென்றல்நகர் பகுதியில் சதீஷ்குமார் (43) என்பவர் டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு விற்றதாக புகார் எழுந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவரிடமிருந்து 103 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திவாகர் (28) என்பவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.