விருதுநகர் மாவட்டம், நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7 முதல் ஜனவரி 25 வரை இந்த ரயில் இயக்கப்படும். திருநெல்வேலியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் (06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையத்திலிருந்து நவம்பர் 8 முதல் ஜனவரி 26 வரை திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரயில் (06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை ஜங்ஷன் வழியாக இந்த ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.