இராஜ: காவலாளிகள் கொலை வழக்கில் திடீர் திருப்பும்...

7பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு நற்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோவிலில் நள்ளிரவில் பயங்கரம் நிகழ்ந்துள்ளது. கோவில் காவலாளிகளான பேச்சிமுத்து (54) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் கொலை செய்யப்பட்டு, கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் அம்மன், சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களையும் உடைத்துவிட்டு கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் ஊழியர்களிடமும், கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக 6 பேரிடமும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி