இராஜ: காவலாளிகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது....

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் நவ. 10ம் தேதி இரவு காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முனியசாமியை போலீசார் நவ. 18 அன்று ராஜபாளையம் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே நாகராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், முனியசாமியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ட்ரோன் மூலமும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட முனியசாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி