இராஜபாளையம்: வைகாசி திருவிழா தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

58பார்த்தது
இராஜபாளையம்: வைகாசி திருவிழா தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
இராஜபாளையம் அருகே தேவதானம் கோயில் வைகாசி தேரோட்டம் திருவிழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற நச்சினார்க்கினியர் தவிர்த்த அருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேவதானத்தில் தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக நச்சினார்க்கினியர் தவிர்த்த அருளிய சுவாமி கோயில் உள்ளது. 

கடந்த மே 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜூன் 8 நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஜூன் 9, இன்று காலை பிரியாவிடை உடன் அம்மையப்பர் பெரிய தேரிலும், அன்னை தவம் பெற்ற நாயகி சிறிய தேரிலும் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. இதில் சிவகிரி, சேத்தூர், தேவதானம் ஆகிய பகுதியைச் சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் தேருக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் தடத்தில் கும்பிடு கர்ணம் எனும் அங்க பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.