இராஜ: பெண் சித்ரவதை; கணவர், மாமியார் மீது வழக்கு...

7பார்த்தது
இராஜ: பெண் சித்ரவதை; கணவர், மாமியார் மீது வழக்கு...
ராஜபாளையத்தை அடுத்த ஜமீன்நத்தம்பட்டியை சேர்ந்த நேசமணி (42) என்பவரை திருமணம் செய்துகொண்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சரஸ்வதி (39)க்கு, திருமணத்தின் போது 20 பவுன் நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கணவர் நேசமணி மற்றும் அவரது தாயார் சுதா ஆகியோர் அடிக்கடி கூடுதல் வரதட்சணை கேட்டு சரஸ்வதியைத் துன்புறுத்தியுள்ளனர். இதனால், 8 பவுன் நகை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மீண்டும் கூடுதல் வரதட்சணை கேட்டதால், சரஸ்வதியின் புகாரின் பேரில் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி