ராஜபாளையம் அருகே அழகாபுரி தொட்டியபட்டி சாலை பகுதியை சேர்ந்த 26 வயது மில் தொழிலாளி வள்ளிநாயகம், புதுப்பட்டிக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றார். கோதைநாச்சியாபுரம் அருகே வேகத்தடை காரணமாக மோட்டார் சைக்கிள் வேகம் குறைத்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் வள்ளிநாயகம் பலத்த காயமடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.