விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 11 கிலோ கஞ்சாவுடன் கிருஷ்ணராஜா (28) மற்றும் சரவணகுமார் (25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.