இராஜபாளையம்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது

84பார்த்தது
இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல். 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி காய்கறி மார்க்கெட் முன்பாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் செட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய முதியவர் ராஜேந்திரன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தது. 

மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.420/- கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி