விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 77 வயதான வேலுச்சாமி, உடல்நலக் குறைவால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து புறப்பட்ட மயிலாடுதுறை செங்கோட்டை ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது கை துண்டிக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கினார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.