விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வி.புதூர் பகுதியைச் சேர்ந்த கனகவல்லி (45) என்ற பெண் ஆசிரியை, நவம்பர் 1 அன்று மாலை ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தினமும் பள்ளிக்குச் செல்ல ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழ் தண்டவாளத்தைக் கடந்து செல்வது வழக்கம். தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப்பாதை காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.