இராஜபாளையம்: சாலை விபத்தில் ஒருவர் பலி

80பார்த்தது
இராஜபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பலி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முத்துச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 58), ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இவர் ஜூன் 11 நேற்று இரவு தனது சொந்த ஊர் செல்வதற்காக தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கடம்பன்குளம் பாலம் அருகே முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென்று நின்றதால் பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக தெரிகிறது. 

அப்போது படிக்கட்டு அருகே பயணித்த முத்துக்குமாரசாமி தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது கால்களில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமாரசாமி உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் ஆறுமுகச்சாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி