இராஜபாளையம்: மரத்தில் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவில் இசக்கி ராஜ் (21) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராமல் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த இசக்கி ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த முத்துராஜ் (27) படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி