விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் சண்முகநாதன் (35) என்ற பெயிண்டர் உயிரிழந்தார். நேற்று மாலை காயல்குடி ஆற்று பாலம் அருகே டூ வீலரில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேன் மோதியதில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடக்கு போலீசார் வேன் டிரைவர் கணேஷ் குமாரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.