விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் காவலர்கள் பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோரை அறிவாளன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, கோவிலில் கொள்ளையடித்து சென்ற நாகராஜ் மற்றும் முனியாண்டி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகராஜை காவல் துறையினர் கைது செய்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய முனியாண்டியை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மூன்றாவது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளி கைது செய்யப்படாததால் தேவதானம் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. கிராமத்தில் அதிகளவு காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.