இராஜபாளையம்: பக்தர்களை வழிமறித்து அகழி

1598பார்த்தது
இராஜபாளையம்: பக்தர்களை வழிமறித்து அகழி
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு ராக்காச்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களை, அப்பகுதி விவசாயிகள் அகழி தோண்டி தடுத்துள்ளனர். அனுமதி இன்றி விளைநிலங்கள் வழியாக பாதை அமைத்ததாகக் கூறி, ஜேசிபி இயந்திரம் மூலம் அகழி தோண்டி இந்தத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து மம்சாபுரம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி